சொந்தவிருப்பில் நாடு திரும்புவதற்கு முன்பான உதவி

உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது ஒஸ்திரிய நாட்டின் திரும்பிச்செல்வோருக்கான-ஆலோசனை நிலையம் உங்களுக்கு உதவ விரும்புகின்றது.

திரும்பிச்செல்வோருக்கான-ஆலோசனை நிலையம் எவற்றைக் கவனிக்கின்றது?

 • திரும்பிச்செல்வோருக்கான-ஆலோசனை நிலையம் உங்கள் தாய்நாட்டிலுள்ள உங்களுக்கான சந்தர்ப்பங்கள் குறித்து அறியத்தரும்.
 • அது உங்களுக்கு, நாட்டிற்குப்-பயணிப்பதற்கான மற்றும் உங்கள் தாய்நாட்டில் ஆரம்ப நாட்களில் நீங்கள் உதவிகளைப் பெறமுடியுமா என்பது குறித்து அறியத்தரும்.
 • அது உங்களுக்கு, உங்கள் பத்திரங்களைப் பெற உதவும்.
 • உங்களது பயணத்துக்கான கட்டணம் செலுத்தப்படுவதை, அது கவனித்துக் கொள்ளும்.
 • அது உங்களது பயணத்தை ஒழுங்குசெய்வதுடன், உங்கள் பயணச்சீட்டையும் பதிவு செய்யும்.
 • அடிப்படைரீதியாக அது உங்களது வெளியேறும் பயணத்தின்போது Wien Schwechat விமானநிலையத்தில் உதவிசெய்யும்.
 • நீங்கள் வேறு நாட்டில் வேறு விமானத்தில் மாறிச்செல்ல வேண்டியிருந்தால், அதற்கும் அது உங்களுக்கு உதவி வழங்கும்.
 • உங்கள் தாய்-நாட்டில் ஆரம்ப உதவியாக நீங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்.
 • திரும்பிச்செல்வோருக்கான-ஆலோசனை நிலையம், உங்களது பயணத்துக்கு முன்பாக, பயணத்தின்போது மற்றும் பயணத்தின் பின்பு மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து தெளிவுபடுத்தும்.

தஞ்சம் கோருவோர் திரும்பிச்சென்றதன் பின்னரான வசதிகள்

„EU Reintegration Programme“ (EURP) எனும் ஒத்துழைத்து புனர்வாழ்வு வழங்கும் சேவை நிலையம், உள்நாட்டு அமைப்புகளுடன் சேர்ந்து நீங்கள் நாடுதிரும்பிய பின்பாக உங்கள் புனர்வாழ்வுக்கு உதவிகளை வழங்குகின்றது.

அவசர உதவிகள்

வருகைதந்த-உடனான பொதி, இதன் பெறுமதி 615 யூறோ, இது தாய்நாட்டைச் சென்றடைந்த பின்பு வழங்கப்படும் உடனடியான உதவியாகும், இதில் பின்வரும் உடனடி வசதிகள் அடங்கியிருக்கும்:

 • விமானநிலையத்தில் மறு ஒருங்கிணைப்பு குழுவினால் வரவேற்கப்பட்டு ஓர் இதயபூர்வமான வரவேற்பு பையும் தரப்படும்: இவை பிறி-பெயிட் சிம்காட், சுகாதாரப்பொருட்கள் (பல்துலக்கி, பற்பசை, சவற்காரம், சாம்போ போன்றவை), 1 போத்தல்தண்ணீர், 1 சுடான உணவு (இது கூப்பனாகவும் இருக்கலாம்) சிறுவர்களின் வயதுக்கேற்ப விழையாட்டுப் பொருட்கள்
 • விமானநிலையத்திலிருந்து அழைத்துச்செல்லல்
 • தொடர்ந்து பயணிப்பதற்கான உதவிகள் (ஒழுங்குபடுத்தல் மற்றும் செலவைப் பொறுப்பேற்றல்)
 • சென்றடைந்த பின்பு 3 நாட்கள் வரையான தற்காலிக தங்குமிடவசதி
 • உடனடியான மருத்துவ உதவிகள்

உங்களுக்கு எவ்வித உதவிகளும் தேவைப்படாவிட்டால் அல்லது குறைவான உடனடி உதவிகள் மட்டுமே தேவைப்படுமானால், எமது உள்நாட்டு தோழமை அமைப்பிடமிருந்து 615 யூறோ இல் ஒருபகுதி பணமாக வழங்கப்படும்.

நீண்டகால ஒத்துழைத்து புனர்வாழ்வு வழங்கும் உதவிகள்

இதன்போது நீங்கள் நாடுதிரும்பிய உதவிப்-பொதியாக 2.000 யூறோ உதவியைப் பெறுவீர்கள். இதில் 200 யூறோவைப் பணமாகப் பெற்றுக்கொள்வீர்கள் மற்றும் ஒத்துழைத்து புனர்வாழ்வு வழங்கும் திட்டத்துக்கு ஏற்றவிதத்தில் 1.800 யூறோ பெறுமதியான அடிப்படை பொருள் உதவிகளை நீங்கள் நாடுதிரும்பிய முதல் 6 மாதங்களுக்கு எமது உள்நாட்டுத் தோழமை அமைப்பிடமிருந்து பெற்றுக்கொள்வீர்கள்.

நாடுதிரும்பிய-பின்னராக வழங்கப்படும் பொருள் உதவிகளில் வேறு வசதிகளுடன் பின்வரும் பொருள் உதவிகள் அடங்கியிருக்கும்:

 • சிறுதொழில் ஒன்றைத் தொடங்குவதற்கான உதவி
 • கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகள்
 • தொழில் சந்தையில் நுழைவதற்கான உதவி
 • ஒன்றுசேர்ந்து திரும்பிய பிள்ளைகள் பாடசாலையில் சேர்வதற்கான உதவி
 • சட்டரீதியான மற்றும் நிர்வாக ஆலோசனை சேவைகள்
 • குடும்பங்களை ஒன்றுசேர்ப்பது
 • மருத்துவ உதவி
 • உளவள உதவி
 • வீட்டுவசதி மற்றும் சாதனங்கள் (பொருத்திக்கொள்ளல்) தொடர்பான உதவி

முதல் கட்டமாக, தயவுசெய்து உங்களுக்கு அண்மையாகவுள்ள தாய்நாடு திரும்புவோருக்கான மத்திய அரசின் பராமரிப்பு- மற்றும் உதவிவழங்கும் ஆலோசனை நிலையத்தை நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள்.


EU Reintegration Programme

Together with local partners, EURP supports returnees in their reintegration process in their countries of origin. For more information please visit the Frontex brochure, website, or contact a return counsellor.

Frontex Logo

We would like to inform you, that after activating, data will be transferred to the provider. Further information you will find in our data protection policy.

தாமாகவே தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்வோர்க்கான பொதுவான அறிவித்தல்

We would like to inform you, that after activating, data will be transferred to the provider. Further information you will find in our data protection policy.

ஒஸ்திறியா நாட்டிலிருந்து திரும்பிச் செல்வோர்க்கான மீள்குடியேற்ர உதவிகள்


Get Return Assistance

Contact us, we help!